Sunday, November 15, 2009

இறைவனின் படைப்பு

மாடி வீட்டு குழந்தை
கண்களில் உறவுக்கான ஏக்கம்
கைகளில் விலை உயர்ந்த பந்து
சாலை ஓர குடிசையில்
இருக்க இடம் இன்றி உறவுகள்
குழந்தையின் கண்களில் பந்து வேண்டி ஏக்கம்



சில வீட்டில்
செல்வ செழிப்புகளில் திளைத்திட
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்க
பல வீட்டில்
பிள்ளைகளே செல்வங்களாக திளைக்கின்றன



பசிக்கு ஒரு வேளை சாப்பிட
பல வேலை செய்திடும் முதியவர்கள் இருக்க
ருசிக்கு பல வேளை சாப்பிட்டு
செரித்திட சிறு வேலை செய்வர் சிலர்



வியப்புக்கும் கேள்விக்கும்
உள்ளாவது
இறைவனா ?
அவன் படைப்பா ?

No comments:

Post a Comment