Sunday, November 22, 2009

காதலின் தொடக்கப்புள்ளி

உறவில் காதல்
மலர்வது எப்போது ?
உணர்வது எப்போது ?

நம்மை நமக்கே
அறிமுகம் செய்து வைக்கும்
தோழமையிலா?

உரிமையோடும் ஆதரவோடும்
காணும் நேசத்திலா ?

கண்ணாடி காட்ட மறந்த அழகை
அந்த கண்களில் காணும் பொழுதா ?

பேச்சுக்களில் உணரும் மென்மையிலா ?
செயல்களில் காணும் கண்ணியத்திலா ?
அருகாமையில் உணரும் பாதுக்காபிலா ?
பார்க்காத பொழுது கொள்ளும் பரிதவிப்பிலா ?
பார்த்தவுடன் கொள்ளும் பரவசத்திலா ?
புரிதலிலும் பகிர்தலிலுமா ?

தொடக்க புள்ளியை
ஆராயும் வேளையில்
உறவுக்கு
சத்தம் இல்லாமல்
முற்றுப்புள்ளி வைத்து செல்கிறது
விதி..........

No comments:

Post a Comment