Wednesday, November 18, 2009

ஹைக்கூ

வறுமையின்
கோர பிடியில் சிக்கி
விற்பனைக்கு வந்து விட்டது
தாய்மையும்....
எஞ்சி இருப்பது
வெறும் உணர்வுகள் மட்டும் தானோ ?
----------------------------------------------------------------
சுடும் என்று தெரிந்தே
தீக்குள் விரலை விட்டேன்
உன்னுடன் ஆன நட்பை போல்
-----------------------------------------------------------
பூக்களுக்கும்
ஜாதி சான்றிதழ் பிறப்பித்தது யார்
'ஜாதி' மல்லி
'துலுக்க' சாமந்தி என்று
--------------------------------------------------------------
அந்நிய தேசத்தவர்கள்
சாதனை படைத்து கொண்டுதான் இருப்பார்கள்
இந்தியர்களின் வாழ்க்கை நிர்ணயம்
பன்னிரண்டு கட்டங்களுக்குள்
அடங்கி இருக்கும் வரை
---------------------------------------------------------------------
இறைவனுக்கு நன்றி
மழலையின் சிரிபிலாவது
அழகு
நிறம்
ஜாதி
மதம்
பார்க்காத
சில நல் இதயங்களை படைத்ததற்கு

No comments:

Post a Comment