Sunday, November 22, 2009

விடை தேடும் மனம்

பூக்களின் நறுமணம்
சொல்லி தெரிவதில்லை

இயற்கையின் அழகு
கேட்டு ரசிப்பதில்லை

உறவில் விரிசல்
சொல்லி தெரிவதில்லை

ஆழ்ந்த மௌனத்தின் அர்த்தம்
சொல்லி புரிவதில்லை

காயங்களின் வலி
சொல்லி உணர்வதில்லை

நேசத்தின் பலம்
கேட்டு உணர்வதில்லை

இவை புரிந்தும்
மனம் ஏற்க மறுக்கும்
ஏனோ தெரியவில்லை

விடை தேடி
அலையும் மனம்
ஏனோ புரியவில்லை…………..

No comments:

Post a Comment